கணவனை இழந்த பெண்ணிடம் தகாத உறவு; நெருக்கமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியீடு!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கென்டையன அள்ளி பகுதியை சேர்ந்தவர் இன்பசேகரன் (வயது 55). பிஇ பட்டதாரியான இவருக்கு திருமணமாகவில்லை. தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் அதேபகுதியில் கணவரை பிரிந்து வசித்து வந்த 27 வயது பெண்ணுடன் இன்பசேகரனுக்கு பழக்கம் ஏற்பட்டு அவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை இன்பசேகரன் தனது செல்போனில் எடுத்து பதிவு செய்துவைத்துள்ளார். இந்த நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது தன்னுடன் நெருக்கமாக இருக்கும் பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அந்த பெண் மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து இன்பசேகரனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.