மக்களவை தொகுதி வாரியாக திமுக ஆலோசனை கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் மக்களவைத் தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற சிதம்பரம் மக்களவைத் தொகுதி கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் தொகுதி கள நிலவரம், கழக அரசின் திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி, பாக முகவர்களின் பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், இந்திய ஒன்றியமே திரும்பி பார்த்திடும் வகையில், நமது தேர்தல் வெற்றி அமையும் பொருட்டு அயராது உழைக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதி மேலிடப் பார்வையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.