10 நிமிடத்தில் ராகி பஜ்ஜி ரெடி!
தேவை: ராகி மாவு – 1 கப், கடலை மாவு – 1 கப், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கு அல்லது பெரிய வெங்காயம் – தேவைக்கு, சமையல் சோடா – டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவைக்கு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சமையல் சோடா, தேவையான உப்பு சேர்த்து, வேண்டிய தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கு அல்லது பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான ராகி பஜ்ஜி ரெடி. குறைந்து பத்து நிமிடத்தில் செஞ்சு பார்த்து ருசித்து பாருங்க…