வந்துவிட்டது “ரெட்மி நோட் 13” ஸ்மார்ட்போன்!

ரெட்மி நிறுவனம் புதிதாக நோட் 13 என்ற பெயரிலஹிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரை உள்ளது. 2.6 கிகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 685 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உடையது. பின்புறம் 100 மெகாபிக்ஸெல் கேமரா, முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா, திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, இளம் பச்சை, ஐஸ் நீலம் மற்றும் செங்கதிர் நிறங்களில் கிடைக்கும். 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவக மாடலின் விலை சுமார் ரூ.14,830. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக மாடலின் மாடல் விலை சுமார் ரூ.16,599 என விற்பனை செய்யப்படுகிறது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *