“பிளஸ் 2 பொதுத்தேர்வு” நேர அட்டவணை அறிவிப்பு!
பிளஸ் 2 பொதுத் தேர்வு பொதுத் தேர்வு நேர அட்டவணையின்படி தேர்வுக்கான நேரங்கள் காலை 10 மணி 1 முதல் மதியம் 1.15 மணி வரை இருக்கும். இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகிவிட்ட நிலையில் மாணவர்கள் தங்களது தயாரிப்பைத் துரிதப்படுத்தி வெற்றிக்குத் தயாராக இருக்கு மாறு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். 2024 -ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை நவம்பர் 16ஆம் தேதி தமிழ்நாடு 1 அரசு தேர்வுத்துறை வெளியிடப்பட்டது. இத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவடையவுள்ளன. இந்த ஆண்டும் எழுத்துத் தேர்வுகள் மூலமே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. மார்ச் 1ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வுடன் தொடங்கி, மார்ச் 22ஆம் தேதி வேதியியல் பாடத் தேர்வுடன் நிறைவடையும். இடைப்பட்ட நாட்களில் கணிதம், கணினியல், வணிகவியல், வேளாண்மை, ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் தேர்வுகள் நடைபெறவுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.