பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல்!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் யாத்திரை நடத்தி வருகிறார். வருகிற 31-ந் தேதி அவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் யாத்திரை நடத்துகிறார். இதனையொட்டி அவரை வரவேற்க பா.ஜனதாவினர் பேனர்களை வைத்து வருகின்றனர். அதன்படி ஆம்பூரை அடுத்த குளிதிகை தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு பேனர்கள் வைக்க பா.ஜனதாவினர் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்கள் சாப்பிடுவதற்காக அங்குள்ள ஓட்டலுக்கு சென்றனர். வேலூர் மாவட்ட பா.ஜ.க. செயலாளர் லோகேஷ் குமாரும் அங்கு சென்றுள்ளார். அப்போது பா.ஜ.க.வினருக்கும், ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பாக மாறியது. இதில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார் தாக்கப்பட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *