ஆன்லைன் வழி கற்றல்; பிப்ரவரி 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் (என்.பி.டெல்) ஆன்லைன் வழி கற்றலுக்கு வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களில் ஆன்லைன் வழியில் சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதன்படி சென்னை ஐ.ஐ.டி.யில் நடப்பாண்டு பருவத்துக்கான ஆன்லைன் படிப்பு சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு என்ஜினியரிங், அறிவியல், மானுடவியல் மற்றும் மேலாண்மை துறைகளில் 720-க்கும் அதிகமான படிப்புகள் கற்றுத்தரப்படவுள்ளன. இதில் 30 லட்சம் பேருக்கு கற்றல் வாய்ப்பை வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் http://nptel. ac.in, http://swayam.gov.in என்ற இணையதளம் வழியாக அடுத்த மாதம் பிப்ரவரி 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.ஆயிரம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.