‘Off side’,-ஈரான் நாட்டுத் திரைப்படம்!
2006-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம்.ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டாலும் வெளிநாடுகளில் பல சர்வதேச விருதுகளை பெற்ற திரைப்படம்.
ஈரான் நாட்டின் சட்டதிட்டங்களை எதிர்த்து அவருடைய படங்களின் மூலம் குரல் கொடுப்பவர்.
சினிமா என்பது சம்பாதிக்கும் கருவி என்று மட்டும் நினைக்காதவர்.அதனால்தான் உலக அளவில் பெயர் பெற்ற இயக்குனராக திகழ்கிறார்.
அந்நாட்டு அரசாங்கத்தால் 20 வருடங்களுக்கு சினிமாவே எடுக்கக் கூடாது என தடையாணை பெற்றவர்.அப்படியும் அவர் சும்மா உட்கார்ந்து விடவில்லை. டாக்ஸிக்குள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி வெற்றியும் பெற்றார்.அப்படத்தின் பெயரும் டாக்ஸிதான்.
அந்நாட்டில் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளை காண தடை உண்டு.அதை கண்டிக்கும் விதமாக ஒரு படமும் எடுத்தார்.அதுதான் இந்த,’Off side’.