நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்,என்.எஸ். எஸ் முகாம் நிறைவு விழாவில், தொழிலதிபர் ராஜமாரியப்பன் பரிசு வழங்கினார்
நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்,என்.எஸ். எஸ் முகாம் நிறைவு விழாவில், தொழிலதிபர் ராஜமாரியப்பன் பரிசு வழங்கினார்
கடலூர், மாவட்டம்
நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் நிறைவு விழா 04.10.2023 அன்று வடக்குமேலூர் பஞ்சாயத்து யூனியன் நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிறைவு விழாவிற்கு ஜவகர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் முதல்வர் ஜோன் அலெக்ஸியஸ் மரியா தலைமைத் தாங்கினார். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் துணை பொது மேலாளர் மற்றும் கல்லூரி துணை செயலாளர் ஓ.எஸ். அறிவு, என்.எல்.சி இந்தியா போக்குவரத்துத் துறை மற்றும் ஜவகர் கல்வி குழும உறுப்பினர் அருளழகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் டி.ஆர்.எம் ராஜமாரியப்பன், பஞ்சாயத்து யூனியன் நடு நிலைப் பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தின் மரக்கன்றுகளைநட்டு நிறைவு விழாவை துவக்கி வைத்தனர்.
முகாமின் போது சிறப்பு விருந்தினர் வடக்கு மேலூர் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 75க்கும் மேற்பட்ட பரிசுகளை வழங்கி பள்ளி மாணவர்களிடையே மரங்கள் நடுவதின் அவசியத்தை குறித்தும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், இது போன்று படிப்பிலும், தன்னார்வத் தொண்டுள்ளத்துடன் சிறந்து விளங்க வேண்டும் என்றும் செல்போனை தேவை இல்லாமல் பயன்படுத்தினால் வரும் தீமைகள் குறித்தும் பள்ளி மாணவர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்
மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர் தம் வாழ்க்கையின் ஆரம்ப நிலையை ஒப்பிட்டுக்காட்டி உழைப்பால் இன்று தொழிலதிபராக உயர்ந்து தன்னை முன்னுதாரணமாக கூறி ஊக்கப்படுத்தியும், பல்வேறு பரிசுகளை வழங்கியும் உரையாற்றினார்.
இவ்விழாவில்
நாட்டு நலப் பணித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுகம் முகாமை ஆய்வு செய்து என்.எஸ்.எஸ் மாணவ தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். இதில் ஜவகர் பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள், வடக்குமேலூர் பள்ளி மாணவர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்சபசிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.