இலங்கையில் இருந்து, சீனாவின், ராடார்கள் வைத்து இந்தியாவை உளவு பார்க்கும் நடவடிக்கைகள்”
இலங்கையில் சிங்கள அரசு இந்தியாவை ஒட்டிய அதன் தீவுக் கூட்டங்களிலோ, கிளிநொச்சியிலோ சில இடங்களை முதலில் சீனாவுக்கு வழங்குவதாகச் சொல்லியது. இறுதியில் டோண்ட்ரா பே என்ற சிறிய தீவில் 45 ஏக்கர் இடத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவுக்கு சிங்கள அரசு வழங்கி உள்ளது. அங்கு ராடார்கள் போன்ற கருவிகளை வைத்து இந்தியாவை உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன.
இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரள துறைமுகங்கள் மற்றும் அணு உலைகளை இந்த ராடார்களின் மூலம் சீனாவால் கண்காணிக்க முடியும். இந்தத் தகவல் ஏற்கெனவே இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளி வந்துள்ளது. ஆனால் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி இந்த செய்தியை மறுத்துள்ளார். பிற நாட்டு செய்தித் தளங்களிலும் இந்தியாவை உளவு பார்க்கும் சீனாவைப் பற்றிய இந்த செய்திகள் வெளிவந்துள்ளன.
பதிலளிமுன்அனுப்பு
|