கட்சி நிர்வாகிகள் மீது தொல்.திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
1) இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு நகரச் செயலாளர் பாக்கியராஜ் திமிரி பேரூர் செயலாளர் நாகராஜ் ஆகியோர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியும் செயல்பட்டு வருவதால் , அவர்களிருவரும் மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்.
2) அவர்கள் இருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடம் அளிக்கலாம்.
3) ஒழுங்கு நடவடிக்கை குழு ஒருமாத காலத்தில் இருதரப்பையும் விசாரித்து கட்சித் தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
4) நடவடிக்கைக்குள்ளான இருவரும் விசாரணை முடியும் வரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதியில்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார்.