நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் தமிழர்களுக்கும், விவசாயிகளுக்கும் செய்த துரோகத்தைப் பற்றி, தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1, சுரங்கம் 1A, என்எல்சி தலைமை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
துண்டு பிரசுரத்தில், மண்ணை காப்போம் மக்களை காப்போம் என்ற தலைப்பில், மக்கள் நிலம் வழங்கியதற்கான காரணம் பற்றியும், நிலம் கொடுத்த, தமிழர்களுக்கு செய்த துரோகம் பற்றியும், என்எல்சி யின் பேராசை -யை பற்றியும், என்எல்சியால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை பற்றியும், சமூகப் பொறுப்பை மதிக்காத என்.எல்.சி நிறுவனத்தைப் பற்றியும், பாட்டாளி மக்கள் கட்சியினால் ஏற்பட்ட நன்மைகள் பற்றியும், என்.எல்.சிக்கு திமுக வக்காலத்து வாங்குவது ஏன் என அனைத்தையும் எடுத்துரைக்கும் வகையில், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
மேலும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகள், விவசாய நிலங்கள் அழிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை கையில் எடுத்து நடை பயணம் போராட்டங்களை முன்னெடுத்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எனவும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என திமுகவின் இரட்டை வேடம் போல, திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் , தொழிலாளர்களை வஞ்சிப்பதாகவும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பற்றி, அவதூறாக அறிக்கை வெளியிட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்க்கு, பாமக வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கண்டனம் தெரிவித்தார்.