நெய்வேலி அருகே உள்ள வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் 100 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி மந்தாரம்குப்பம் வடக்கு வெள்ளூர்  ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கம்மாபுரம் ஒன்றிய செயலாளர்கள் திருமாவளவன், ராயர் மற்றும் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தனர். கம்மாபுரம் ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் கடலூர் மேற்கு மாவட்ட  பொருளாளர் கதிரவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார், புவனகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு  500  பெண்களுக்கு  புடவைகள் , தென்னங்கன்றுகள், சலவை தொழிலாளர்களுக்கு 25 சலவை பெட்டிகள் ஆகியவை வழங்கப்பட்டது மேலும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட 2000 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் இதர பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ரகு, சிவப்பிரகாசம், விஜயகுமார், வீரப்பன், சசிகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial