நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 23ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி 10 நாட்கள் நிறை
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இந்த நிறுவனத்தின் சார்பில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு 23ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் ஹாலில் கடந்த 5-ம் தேதி என்எல்சி சேர்மன் பிரசன்னா குமார் மோட்டுப்பள்ளி துவக்கி வைத்தார் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டார்
இந்த புத்தக கண்காட்சியில் சிறந்த 135 பதிப்பகங்கள் கலந்து கொண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன இந்த புத்தக கண்காட்சியில் அனைத்து வகையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன இந்த புத்தக கண்காட்சி கலந்து கொள்வதற்காக நெய்வேலி அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதியிலிருந்து தினமும் பள்ளி மாணவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கல்லூரி மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் தினமும் அந்த புத்தக கண்காட்சியில் சென்று அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் இன்று கடைசி நாள் என்பதால் புத்தக கண்காட்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.