காரைக்குறிச்சி சூரிய பகவான் வழிபட்ட தலமான பசுபதீஸ்வரர் உடனுறை சௌந்தரநாயகி ஆலய நான்காம் ஆண்டு நன்னீராட்டு நிறைவு திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது.
காரைக்குறிச்சி சூரிய பகவான் வழிபட்ட தலமான பசுபதீஸ்வரர் உடனுறை சௌந்தரநாயகி ஆலய நான்காம் ஆண்டு நன்னீராட்டு நிறைவு திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் சூரிய பகவான் சிவனை வழிபட்ட தலமாக விளங்கும் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் நன்னீராட்டு நிறைவு விழா மற்றும் திருக்கல்யாணம் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.காலை வேள்வி பூஜை மற்றும் சாமி அம்பாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.மாலையில் நடராஜர் அபிஷேகம் நடைபெற்று சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் காரைக்குறிச்சி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் திருக்கல்யாணத்தை கண்டு களித்து வழிபாடு செய்து சென்றனர்.பின்னர் மாலை வேளையில் கைலாய வாத்தியம் முழங்க சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை கிராம நாட்டாமைகள், கிராம சான்றோர்கள், ஆலய இறையன்பர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு ஏற்பாடு செய்திருந்தனர்.