வடலூர்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் ஆய்வு
வடலூர்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் ஆய்வு
வடலூர் நகராட்சி பகுதியில்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கல் செய்யும் பணிக்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது.அதன்படி வடலூரில் உள்ள 33 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதில் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி மற்றும் பார்வதிபுரம் இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் இன்ஜீனியர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக படிவங்கள் பெறும் பணிகள் நடைபெறும் விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதே போல் மற்ற வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது வடலூர் நகர மன்றத் தலைவர் சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் ரஞ்சிதா,நகர செயலாளர் தமிழ்செல்வன்,பொறியாளர் சிவசங்கரன், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.