வடலூரில் ஞானசபையில், தைப்பூச விழா ஏற்பாடுகள் தீவிரம்
வடலூரில் ஞானசபையில்,
தைப்பூச விழா ஏற்பாடுகள் தீவிரம்
கடலூர்,மாவட்டம்,வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய154வது ஆண்டு தைப்பூசவிழா பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விழா வேலைகள் நடைபெற்று வருகிறது. வள்ளலார் 1867 கடலூர் மாவட்ட வடலூரில் பசிப்பிணி போக்க சத்தியதருமச்சாலையினையும், நிறுவினார் அதில் தடையில்லா அன்னதானம் நடைபெற்று வருகின்றது, அதேபோன்று வள்ளலார் நிறுவிய சத்யஞானசபையில், இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோரும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கிய ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது, ஆண்டுதோறும் தை மாதம் வரும் பூசநட்சத்திரத்தன்று 7 திறைகள் நீக்கிய ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும் வழக்கம், இதனைக்கான உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கில் திரள்வது வழக்கம்,அதன்படி இந்த ஆண்டு 154வது ஆண்டு தைப்பூசஜோதி தரிசனவிழா பிப்ரவரி10ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்குகிறது, இதனையொட்டி, 10ந்தேதி காலை 7.30 மணி அளவில்
வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும், சன்மார்க்கொடி உயர்த்தப்படுகிறது.தொடர்ந்து காலை 10 மணி அளவில்
சத்யஞானசபையில் சன்மார்க்கொடி உயர்த்தப்படுகிறது.இதனை யொட்டி ஞானசபையில் சத்திய தருமச்சாலை, சித்தி பெற்ற மேட்டுக்குப்பம், திருவறை ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்களில் வருணம் பூசும் பணி நடைபெற்று நிறைவடைந்தது, தொடர்ந்து விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணியும் தொடங்கிநடைபெற்று வருகிறது, ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச விழாவை யொட்டி 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் திரளுவது வழக்கம், ஆனால் இந்த ஆண்டு சர்வதேசமையம் அமைக்க ஞானசபை பெருவெளியில் கடைக்கால்
அமைக்க குழிகள் தோண்டப்பட்டதால், ஏராளமான பள்ளங்கள் இருப்பதால் நீதிமன்ற உத்திரவுபடி தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலால் இந்த ஆண்டு தைப்பூச விழாகடைகள் அமைக்கப்படுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது,விழாவிற்காக போக்குவரத்துகள் ஒழுங்குபடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரங்களில் பேருந்துகள்,நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது, அங்கிருந்து மாற்று சிறு வாகனங்களின் மூலமாக மூலம், ஞானசபைக்கு வந்து செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜெயக்குமார்
மேற்பார்வையில்,நெய்வேலி டிஎஸ்பி சபிபுல்லா மற்றும் வடலூர் போலீசார் உடன் மாவட்ட முழுவதிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்,விழாவை ஒட்டி மண்வெட்டும்எயந்திரங்கள் மூலம் சபைத்திடல் சமப்படுத்தப்பட்டது, மேலும் இடையூறாக இருந்த சபை வளாகத்தில் இருந்த மரங்களின் கிளைகள் மட்டும் அகற்றப்பட்டது என தெய்வ நிலையசெயல் அலுவலர் ராஜாசரவணகுமார்,அறங்காவலர் குழுதலைவர் அழகானந்தம் ஆகியோர் தெரிவித்தார்கள். ராட்டினம், சர்க்கஸ்விளையாட்டுகள்
ஞானசபை வளாகத்திற்குவெளியில் அமைக்கப்பட்டுள்ளது,