ரயில் முன் பாய்ந்த தாய்-மகள்!
திருவிடைமருதூர் பிச்சை கட்டளை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரேவதி (வயது50). இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 30). இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் திருவிடைமருதூர் ரயில் நிலையம் அருகே மயிலாடுதுறையில் இருந்து வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு ரேவதியும், அவருடைய மகள் மகேஸ்வரியும் உடல் சிதறி இறந்து கிடந்தனர். இதை அறிந்த ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று உடல் பாகங்களை சேகரித்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.