மோடியை ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்; விசிக மாநாட்டில் திருமாவளவன் கடும் தாக்கு!
திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சி தலைமையின் 61-வது ஆண்டு மணிவிழா நிறைவுவிழாவும், இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றியின் கால்கோள்விழா என முப்பெரும் விழாவாக வெல்லும் ஜனநாயகம் என்னும் தலைப்பில் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் திருமாவளவன் பேசும் போது கூறியதாவது:-இந்த மாநாடு பா.ஜனதா கட்சிக்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சனாதன சக்திகளுக்கு எதிரான மாநாடு. பா.ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து விரட்டி அடிப்போம். வழக்கமாக சிறுத்தைகள் காடுகளில் வசிக்கும். ஆனால் நமது கிராமங்கள் தோறும் சிறுத்தைகள் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டிகளை இங்கு வந்து பார்க்க செல்லுங்கள்.மோடியை ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். இனி ஒரு போதும் தாமதிக்க முடியாது. நாட்டை காப்பாற்ற வேண்டும். நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். மோடி, அமித்ஷா கும்பல் மோசடி கும்பல். மக்களை ஏய்த்து பிழைக்கும் அவர்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது.10 ஆண்டுகளில் அவர்கள் என்ன சாதித்தார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று கூறினார்களே கொடுத்தார்களா? வடிவேல் மாதிரி மோடி நடிக்கிறார். பொதுத்துறைகள் எல்லாம் தனியார் மயமாக்குகிறார்கள். அப்பாவி சூத்திர இந்து மக்கள் விளிப்புடன் இருக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிக்கு அடுத்ததாக பெரிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. நீங்கள் சனாதன இருளை விரட்டி அடிக்க டார்ச் லைட் அடித்த போது கண்கொள்ளா கட்சியாக இருந்தது. நாடுமுழுவதும் இந்தியை, சமஸ்கிரதத்தை திணித்து சனாதனத்தை நிலைநாட்ட வேண்டும். ராமன் என்ற பெயரை உச்சரிக்கக்கூடாது என்று எனது தந்தை பெயரை தொல்காப்பியன் என்று மாற்றினேன்.எங்களுக்கும் உண்டு ராமர் இருக்கிறார்கள். அது ஈ.வே.ராமசாமி, கன்சிராம்(அம்பேத்கர்), அவருடைய அண்ணன் பலராம் என்று எங்களுக்கும் ராமர் உண்டு. நாங்கள் ராமர் பக்தியை எதிர்க்கவில்லை. ராமர் பெயரை சொல்லி அரசியல் செய்வதை எதிர்க்கிறோம். ஜெய்ஸ்ரீராம் என்று அவர்கள் கூறுவதற்கு பதிலாக நாங்கள் ஜெய்பீம் என்று முழங்குகிறோம். நாங்கள் வெல்லும் ஜனநாயகம் என்று முழங்குவோம். பாசிசத்தின் எதிர்ச்சொல்தான் ஜனநாயகம். பா.ஜனதா கட்சி மீண்டும் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் 40-க்கும் 40 நாம் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.