உலக யோகா தினத்தை முன்னிட்டு மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம். உலக யோகா தினத்தை முன்னிட்டு மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. மாடர்ன் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் திரு MKR சுரேஷ் அவர்கள் தலைமை ஏற்றார், கல்லூரியின் முதல்வர் ரம்ஜான் பாத்திமா யோக கலையின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார். யோகா ஆசிரியர் திரு மணிகண்டன் அவர்கள் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு யோகாவினை பயிற்றுவித்தார். இவ்விழாவினை NSS ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.