வளர்ச்சி திட்ட பணிகள்; எம்எல்ஏ துவக்கி வைத்தார்!
உடையார்பாளையம் பேரூராட்சியில் உடையார்பாளையம் வார்டு எண் – 2 ல் செக்கான் குட்டையில் அம்ரூத் 2.O திட்டத்தின் கீழ், ரூ 42.00 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி, வடக்கு ஆதிதிராவிடர் காலனியில்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ்,சமுதாயக் கூடத்திற்கு ரூ 8.75 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, பள்ளிவாசல் மயானத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், ரூ 7.00 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி, வார்டு எண் – 10 ல் கைக்களநாட்டார் தெருவில், அம்ரூத் 2.O திட்டத்தின் கீழ் ரூ 32.00 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி,உடையார்பாளையம்,ஜெயங்கொண்டம் மெயின் ரோடு அருகில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், ரூ 14.31 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமான பணி, ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தனசேகர், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், துணை தலைவர் அக்பர் அலி, செயல் அலுவலர் கோமதி, இளநிலை பொறியாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.