வடலூர் பகுதியில் உடன்பிறப்பாய் ஒன்றிணைவோம்” திமுக,உறுப்பினர் சேர்க்கும் முகாம்,அமைச்சர்.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்
கடலூர், மாவட்டம்வடலூரில் “திமுகழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கும், “உடன்பிறப்புகளாய் ஒன்றிணைவோம்” திட்டந்தினை கடலூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளரும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கருங்குழி ஊராட்சியில் துவக்கி வைத்தார். பின்னர் வடலூர் நகராட்சி, பகுதியில், 27 வார்டுகளிலும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியிலும்,உறுப்பினர் சேர்க்கும் பணியினை துவக்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் கழக கொள்கை பரப்புக்குழு துணை செயலாளரும், குறிஞ்சிப்பாடி, தலைமை கழக பொறுப்பாளருமான பெருநற்கிள்ளி, குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் வி.சிவகுமார், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.நாராயணசாமி, ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணியன், வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி பேரூர் கழக செயலாளர் சங்கர், அவைத்தலைவர் ராமர், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணை செயலாளர் விடுதலை சேகர் உள்ளிட்ட
கழக நிர்வாகிகள்,கலந்து கொண்டனர்.
படம் விளக்கம்:
கடலூர் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம்,வடலூர் நகராட்சி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில், “உடன்பிறப்புகளை ஒன்றிணைவோம்” உறுப்பினர் சேர்க்கும் முகாமினை, மாண்புமிகு. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
குறிஞ்சிப்படி தலைமை கழக பொறுப்பாளருமான ச.அ.பெருநற்கிள்ளி, ஒன்றிய கழக செயலாளர்கள் வி.சிவக்குமார், ஆர்.நாராயணசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.