நாளை பள்ளிகள் திறப்பு; வகுப்பறைகளை அமைச்சர் ஆய்வு…!
தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு சமீபத்தில் நடந்தது. மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் சில பாடங்கள் தேர்வு தள்ளிவைக்கப்பட்டன. கடந்த 13-ம்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி 22-ம் தேதி முடிவடைந்தது. அதன்பின் பள்ளிகளுக்கு 10 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டன. இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை இன்று (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு பிறப்பு விடுமுறையுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து விடுமுறை முடிந்து நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் வேளச்சேரியில் உள்ள
அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (திங்கட்கிழமை) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி, பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டட கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்