“வணிகர் விடுதலை முழக்க மாநாடு”
மே 5 “வணிகர் விடுதலை முழக்க மாநாடு”மதுரையில் நடைபெற்றது.பேரமைப்பின் மாநிலத் தலைவவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா முன்னிலையில் மதுரை மண்டலத் தலைவர் டி.செல்லமுத்து மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.
மாலை 4 மணியளவில் பின்னணி பாடகர் மனோ அவர்களின் லக்ஷ்மணன் சுருதி இன்னிசை கச்சேரியை அனைவரும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இசை நிகழ்ச்சியை ரசித்தனர். 41-வது வணிகர் தினம் விடுதலை முழக்க மாநாடாக நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். கவிஞர் வைரமுத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.மாநாட்டில் வேலம்மாள் குழும நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கம், நாகாபுட்ஸ் தலைவர் கமலக்கண்ணன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், மகாராஜா, டால்மில் நிறுவனர் சந்திரகுமார், ராஜ்மகால் மதுரை முருகானந்த், மதுரை ஜிகர்தண்டா ஜிந்தா, தார் பிரதர்ஸ், கல்யாணமாலை மீரா நாகராஜன் ஆகியோர் மாலை 6 மணிக்கு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.மாநாட்டில் கலந்து கொண்ட வணிகர்களுக்காக கார் பார்க்கிங்,சிற்றுண்டி, மதிய உணவு,இரவு உணவு, குடிநீர் வசதிகளை மிக சிறப்பாக மதுரை விழா குழுவினர் செய்திருந்தனர். மேலும் தமிழக அனைத்து கிளைச் சங்க நிர்வாகிகள் என லட்சக்கணக்கானோர் மதுரை மாநாட்டில் குவிந்துள்ளனர்.இந்த வணிகர் விடுதலை முழக்க மாநாடு தமிழக வணிகர்களின் ஏகோபித்த ஒற்றுமையை நிலைநாட்டும் மாநாடாகவும், 40 ஆண்டு வணிக வரலாற்றை முத்திரை பதிக்கும் மாநாடாகவும், அகில இந்திய வணிகர் அமைப்பிற்கு வழிகாட்டும் மாநாடாகவும் அமைத்துக் கொடுத்த தேசிய,மாநில,மாவட்ட, வட்ட,ஒன்றிய, கிராம, வணிகர் சங்கங்களுக்கு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நன்றி கூறி உள்ளார்.