“நாகை மீனவர்கள் சிறைபிடிப்பு” இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலன்(வயது 37). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ராஜ்குமார்(30), கனிவாணன்(27), பழனிவேல்(37), அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன்(43), தினேஷ்(24), நம்பியார் நகரை சேர்ந்த சதீஷ்(39), சாமந்தான்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(20), ஸ்டீபன்ராஜ்(27), ராஜேஷ்(36), ரத்தினசாமி(35) ஆகிய 10 மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் 10 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை பருத்திதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *