“அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகட்டும்”- அண்ணாமலை!
நிலத்தில் சிந்திய வியர்வை வீண்போகாமல், பருவமழையும்காலநிலையும் பொருந்தி நின்று, நிறைந்த விளைச்சல் பெற்றதற்குசூரியபகவானுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி சொல்லி, வரும்ஆண்டிலும் விவசாயிகளுக்குத் துணை நிற்க வேண்டும் என்றுவேண்டி வணங்கும் திருநாள் நம் பொங்கல் திருநாள்.’சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’என்பது வள்ளுவர் வாக்கு. உலகின் அனைத்துத் தொழில்களிலும்உழவுத் தொழிலே முதன்மையானது. உணவை உற்பத்தி செய்யும்விவசாயிகளும், அவர்களுக்குத் துணையாக இருக்கும் இயற்கைக்கும்,கால்நடைகளுக்கும் நன்றி சொல்லி வணங்குவது உலகம்முழுவதுமே பொதுவானது. பாரதத்தின் பல மாநிலங்களில் பல்வேறுபெயர்களில் கொண்டாடப்பட்டாலும், நமது பொங்கல் திருநாள் நமதுவாழ்வியலோடு நெருக்கமானது.நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மஞ்சளும், காய்கனிகளும், இனிப்பான பொங்கலும், இல்லம் நிறை அறுவடையுமாக, பொங்கல் தினம் சிறக்கட்டும். அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகட்டும்.பொங்கலோ பொங்கல்! என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.