மாவட்ட முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, நிறுவனங்களில், பாலியல்தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க குழு அமைக்க, மாதர் சங்கம் தீர்மானம்
கடலூர், மாவட்டம்
வடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்ககடலூர்மாவட்ட குழுக்கூட்டம் வடலூரில் நடைபெற்றது,
இந்த கூட்டத்திற்கு மாநில செயற்குழ உறுப்பினர்சீத்தா, தலைமை தாங்கினார்,மாநில செயற்குழு உறுப்பினர் மேரி முன்னிலை வகித்தார், கூட்டத்தில்
மாவட்டசெயலாளர் மாதவி, மாவட்ட தலைவர்
மல்லிகா, மாவட்ட துணைத்தலைவர்தேன்மொழி,
துணைச்செயலாளர். அன்புசெல்வி, குறிஞ்சிப்பாடி
நகர செயலாளர் ரேவதிமற்றும் மாவட்டக்குழு
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாவட்டத்தில் நீட்டு தேர்வு தொடர்பான மாணவி தற்கொலை சம்மந்தமாகவும், எதிர்கால இயக்கங்களின் செயல்பாடுசம்பந்தமாகவும்
விவாதிக்கப்பட்டது,
கூட்ட தீர்மானங்கள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆய்வுகளை செய்து ,கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டங்கள் நடத்துவது.
அரசுமருத்துவமனைகளில்விஷக்கடி, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கு தேவையான அத்தியாவசிய மருத்துகளை, 24 மணி நேரமும், இருப்பு வைக்க வேண்டும்
மகப்பேறு மருத்துவத்திற்கான, நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய, நவீன
சிசிச்சை கருவிகள், மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவுகள் துவக்கி, படுக்கை வசதிகளையும், கழிப்பிட வசதிகளையும் அதிகப்படுத்துவது,
வடலூரில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் இயங்ககூடிய மதுபானக்கடையை அகற்ற வேண்டும்,மாவட்ட முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, நிறுவனங்களில், பாலியல்தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க குழு. அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.