காலை சிற்றுண்டில் கிடந்த பல்லி; மாணவ-மாணவிகளுக்கு உடல்நிலை பாதிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்த வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை இந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. அதில் பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த உணவை சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.