காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!
ஈரோடு பவானி ஜோதி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மகன் தாம ரைக்கண்ணன் (வயது 28). இவரும் கோவை காந்திநகரை சேர்ந்த வேலுமணி மகள் ஹரிஷ்மா (22) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இந்த விவ காரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் திருப்பூர் அருகே உள்ள காங்கேயத்தில் ஒரு முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் காட்டுப்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். அதன்பின் தாமரைக் கண்ணனும், ஹரிஷ்மாவும் பாதுகாப்பு கேட்டு காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் ஹரிஷ்மா விருப்பத்தின் பேரில் தாமரைக்கண்ணனுடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.