குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் தற்காலிக நிழற்குடை இல்லாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் புதிய பேருந்து கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது இதற்காக பழைய பேருந்து கட்டிடம் அண்மையில் முற்றிலுமாக இடிக்கப்பட்டது
இந்நிலையில் கோடை வெயில் தாக்கம் தற்பொழுது கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் 100 டிகிரியை தாண்டி கடந்த இரு தினங்களாக சுட்டெரித்து வருகிறது
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி விழுந்து வீடு திரும்பும் மாணவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தற்காலிக நிழல் கூடைகள் இல்லாத காரணத்தினால் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள சிவன் கோயில் பக்கவாட்டில் உள்ள சிமெண்ட் கட்டையில் அமர்ந்துள்ளனர் மேலும் மாணவர்கள் பலர் பெரியார் சிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் கொண்ட கட்டை மீது அமர்ந்து உள்ளனர்
இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது எனவே புதிய பேருந்து நிலையம் கட்டிடம் முழுமையாக நிறைவடையும் முன் தற்காலிக நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது