நெய்வேலி கெங்கைகொண்டான் பேரூராட்சி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி கெங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது
நெய்வேலி கங்கைகொண்டான் பேரூராட்சி குடியிருப்போர் நல சங்க பொதுச் செயலாளர்
P.ஜோதிபாசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற முகாமில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு இருதைய நோய்களை கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு
மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது
மேலும் இசிஜி ,எக்கோ, சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த கொதிப்பு, பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேல் சிகிச்சை தேவை இருப்பின் அவர்கள் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நிகழ்ச்சியில் குடியிருப்போர் சங்கத் தலைவர் இப்ராஹிம் அவர்கள் முன்னிலை வகித்தார்
முகாமில் பொருளாளர் கார்த்திகேயன்,
அலுவலக செயலாளர்
தீன் முகமது ,
துணைத்தலைவர் விமலா ,
துணைச் செயலாளர் சர்மிளா ,
முஹம்மது பாரூக்,
மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்நாதன் சட்ட ஆலோசகர் செல்வம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.