வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்!
வடதமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில வருகிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண் டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியா குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.நாளை (புதன்கிழமை) கன்னியா குமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். வியாழன் முதல் சனிக்கிழமை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.