கடலூர் மாவட்டத்திற்கு “ஆரஞ்சு அலர்ட்”-மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வட தமிழக மாவட்டங்களில் 06.01.2024 முதல் 08.01.2024 வரை மழைபெய்யக் கூடும் எனவும், குறிப்பாக 07.01.2024 அன்று கடலூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் (ஆரஞ்சு அலர்ட்) என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.

எனவே கடலூர் மாவட்ட மீனவர்கள் தங்களது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கடல்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் 06.01.2024 முதல் 08.01.2024 வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *