ககன்யான் திட்டத்தில், மனிதர்களை விண்ணில் நிலை நிறுத்தும் விண்கலத்தின் எஞ்சின் சோதனை மகேந்திர கிரியில் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவு திட்டமான ககன்யானின் இந்த சோதனை வெற்றி முக்கிய மைல்-கல் என இஸ்ரோதனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் (IPRC) இன்று 240 வினாடிகளுக்குத் சோதனை நடத்தி வெற்றிகரமாக முடிந்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் விண்கலம் மற்றும் எஞ்சின் கட்டுமானம், ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை திருநெல்வேலி மாவட்டம் மகேந்திர கிரியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில் விகாஸ் எஞ்சின் அதி வெப்ப சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் ஒன்பது என்ஜின்கள் 1215 வினாடிகளின் 14 சூடான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட அனைத்து தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் இந்திய தயாரிப்பு என இஸ்ரோ தெரிவித்துள்ளது.