“கணக்கில் காட்டப்படாத, 3.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு.”
“கணக்கில் காட்டப்படாத, 3.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு.”
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த நிறுவனம் வாங்கி இருக்கக் கூடிய இடங்களுடைய நில விவரப் பத்திரங்கள், வங்கி பரிவர்த் தனைகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் 50 குழுக்களாகப் பிரிந்து சோதனை யில் ஈடுபட்டனர்.
ஏப்ரல் 24ல் துவங்கிய சோதனை மே 1ம் தேதி நிறைவடைந்தது.
இதில், இந்த நிறுவனம், 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத, 3.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சிக்கிய ஆவணங்கள்; நிறுவன முதலீடுகள் குறித்து, ஆய்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், அரசியல் கட்சியினருடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்பதை வருமான வரித்துறை அதிகாரிகளே உறுதிப்படுத்தி உள்ளனர்.
எங்கள் நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.38,000 கோடி என வெளியான தகவலும் தவறானது என்று கூறியுள்ளது.
வருமானவரி சோதனையில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் தவறாக வழிகாட்டுபவை எனவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தங்களது நிறுவனத்தின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளது எனவும் ஜி ஸ்கொயர் சாடியுள்ளது.