அரியலூர் M.R.கல்லூரியில் 184 வது உலகப்புகைப்படநாள் விழா.
M.R.கல்லூரியில் 184 வது உலகப்புகைப்படநாள் விழா.
19.08.2023, அரியலூர்.
அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே உள்ள மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறை சார்பில் (visual communication)
184- வது உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் காட்சி தொடர்பியல் துறை தலைவர் சி.சிலம்பரசன் வரவேற்புரை ஆற்றினார்
தாளாளர் M.R.இரகுநாதன் தலைமை தாங்கினார். இயக்குனர் R.இராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார் கல்லூரி முதல்வர் டாக்டர்.S.சேகர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் P.சங்கீதா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரி தாளாளர் பேசுகையில்:
மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் புகைப்படத்துறை, பத்திரிக்கைத்துறை, காட்சித்தொடர்பியல் துறை, ஊடகத்துறை, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிய வேண்டும்.
அதற்கு உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
உங்கள் தனித்திறமை சமூகத்தால் பாராட்டப்படக்கூடியதாக அமையவேண்டும்.
உலகம் போற்றும் சிறந்த படைப்புகளை நீங்கள் உருவாக்கவேண்டும்
திறமை ஒன்று மட்டுமே உங்களை வாழ்க்கையில் உயர்த்தும்.
வித்தியாசமாகவும் மாறுபட்டும் புதிதாக சிந்திக்கவேண்டும்.
சமூகம் உங்களை வரவேற்கும் வகையில் உங்கள் படைப்புகள் அமைய வேண்டும்.
மாறிவரும் உலகில் மாற்றத்திற்கு ஏற்ப நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்
கல்வி, அறிவு, திறமை, தனித்துவம், தகுதி, நுணுக்கங்கள், யோசிக்கும் திறனை வளர்த்துக்கொண்டு உங்களை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்
என்று கூறி புகைப்பட தின வாழ்த்துக்களை மாணவர்களுக்கு தெரிவித்தார்.
இயக்குனர் முனைவர் ஆர்.இராசமாணிக்கம் பேசும்போது
புகைப்படத்துறை வரலாறு மற்றும் புகைப்படக் கருவியின் வளர்ச்சியையும் எடுத்துரைத்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர்D. வேல்முருகன்
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்