வடலூர் சுதா மருத்துவமனையில் ஐ சி யு மற்றும் சிடி ஸ்கேன் திறப்பு விழா நடந்தது

கடலூர். மாவட்டம்
வடலூர் சுதா மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஐ சி யு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் சிடி ஸ்கேன் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. சிபாகா நிறுவனமும் சுதா மருத்துவமனையும் இணைந்து ஐ சி யு பிரிவு சேவையை நடத்துகிறது. இதன் துவக்க விழா நேற்று காலை வடலூர் சுதா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. ஐ சி யு பிரிவை பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் சென்னியப்பன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சிடி ஸ்கேன் பிரிவை சிபாகா நிர்வாக இயக்குனர் மருத்துவர்
ராஜா அமர்நாத் திறந்துவைத்தார். பின்னர் அவசர சிகிச்சை ( ஐ சி யு )செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
விழாவில் மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி நிர்வாகிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர்கள், அரிமா சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். வடலூர் சுதா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன், நிர்வாகஅதிகாரி விஜயலட்சுமி சரவணன் ஆகியோர் விருந்தினர்களை வரவேற்றனர், டாக்டர் சங்கரன் நன்றி கூறினார், சுதா மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிபாகா நிறுவன ஊழியர்கள் விழாவில் பங்கேற்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial