பக்தர்களுக்கு குட்நியூஸ்; வந்து விட்டது இலவச வை-பை!
சபரிமலைக்கு வரும் ஐய்யப்ப பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களின் வசதிக்காக கடந்த மாதம் 25-ம் தேதி வலிய நடைபந்தல் பகுதியில் முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். நிறுவனமும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இலவச வை-பை வசதியை அறிமுகம் செய்து, 2-ம் கட்டமாக தற்போது மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை 27 இடங்களில் இலவச வைபை இணைய வசதி அமலுக்கு வந்தது. பக்தர்கள் முதல் 30 நிமிடம் இலவச வைபை இணைய வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ரூ.9-க்கு ரீசார்ஜ் செய்து ஒரு ஜி.பி. டேட்டா பெறும் வசதியும் உள்ளது. ரூ.99-க்கு ரீசார்ஜ் செலுத்தி தினசரி 2.5 ஜி.பி. டேட்டா பெறும் வசதியையும் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.