நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொரிகடலை!.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொரிகடலை!.
09.08.2023, சென்னை
பொரிகடலையை பொழுது போக்கிற்காக சாப்பிட்டீர்கள் என்றால் இனி தினமும் அதை தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் ஒருகைப்பிடி பொரி கடலையை தினமும் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்கிறது இதை நாங்கள் சொல்லவில்லை.
ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி சொல்கிறார். சிம்ரன் சாய்னி கூறுகையில்
நீங்கள் பொரிகடலையை சத்துணவு என்று கூறலாம், ஏனெனில் இதை சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நீர்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் அடங்கி இருக்கிறது.உடனடி புத்துணர்வை தருகிறது.
பொரிகடலையில் அதிகமாக புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது. அதனால் தான் அதை சாப்பிட்ட பிறகு உடனடியாக புத்துணர்வு கிடைக்கிறது.
நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால் தினமும் இரு கைப்பிடி பொரிகடலை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தினமும் இரு கைப்பிடி பொரிகடலை சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது பல வியாதிகள் உங்களை தாக்காது. மேலும் பருவ நிலை மாற்றத்தால் நம் உடலுக்கு தீங்கு நேராது மலச்சிக்கலை தீர்க்கும்
தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறையால் இன்றைய காலகட்டத்தில் அநேகம் பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதித்து வருகின்றனர்.
இதை தவிர பல்வேறு வியாதிகளின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தால், நாள் முழுவதும் நீங்கள் சோம்பலாகவும், மனவுளைச்சலுடனும் இருப்பீர்கள். மலச்சிக்கல் இருக்கும் பெண்கள் தினமும் பொரிகடலை உண்டு வந்தால் பிரச்சனை தீரும். உடல் எடை குறைப்பு
நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஒருகைப்பிடி அளவு பொரிகடலை உண்பது நல்ல பலன்களை அளிக்கும்.
உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி அவர்கள் கூறுவது, இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகின்றன. இதனால் உங்கள் வயிறு சுத்தமாகும். தானாகவே உடல் பருமன் குறைய தொடங்கி விடும்.
முதுகு வலி தீரும்
பலவீனம் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு முதுகில் வலி ஏற்படுவது உண்டு. இது போன்ற பெண்கள் ஒருகைப்பிடி அளவு பொரிகடலையை தினமும் சாப்பிட்டால் இந்த பிரச்சினை தீரும்.
ஏனென்றால் இதில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. இது நம் தசைகளை இலகுவாக்குகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அவசியம் பொரிகடலை சாப்பிட வேண்டும். ஏனெனில் இது ஒரு ஆரோக்கியம் நிறைந்த சிற்றுண்டி. இதில் கலோரிகள் அளவு குறைவாக இருக்கும். ஆனால் அதிக அளவில் புரதம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இது அதிக அளவில் தேவைப்படுகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நலம் தருகிறது
பொரிகடலை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நலம் சேர்க்கும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும். மேலும் இதில் கலோரிகள் குறைந்து இருக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளது.
மற்ற பலன்கள்
பொரிகடலை செரிமான சக்தியை அதிகரிக்கும் மற்றும் மூளையின் திறனை மேம்படுத்தும். இரத்தத்தை சுத்திகரித்து பாதுகாப்பாக வைக்கிறது,
இதன் மூலம் நம் சருமம் பொலிவடைகிறது. இதில் இரும்பு சத்து இருப்பதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது
இவ்வளவு சக்தி நிறைந்த பொரிகடலையை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்! .
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T