ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.
ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்
ஜூலை 09
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்,சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெறும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அஸ்வந்த் பொருளாளர் கார்த்திக், மாவட்ட தலைவர்கள் ராஜன், ரமேஷ் குமார் மண்டல தலைவர் முருகானந்தம் வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அதில் 245 நபர்கள் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டு முதலில் 185 நபர்கள் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்றனர் மேலும் 60 நபர்கள் வரும் செவ்வாய்க்கிழமை செல்ல உள்ளனர்.முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் திருவேங்கடம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் காலேஜ் மாணவியர்கள், லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பணியாற்றினர்.இறுதியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் ஜெயின் நன்றி கூறினார்.