ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நலன் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் துவக்கம்
ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நலன் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் துவக்கம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பல்வேறு ஊராட்சிகளில் பல்வேறு நல திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
இதில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சியில், MGNREGS 2022-2023 திட்டத்தின் கீழ், ரூபாய் 19.10 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுமான பணியை துவக்கி வைத்து கூவத்தூர் ஊராட்சியில், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், ரூபாய் 10.80 லட்சம் மதிப்பீட்டில், வடுகர்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் தார் சாலை அமைக்கும் பணி,
அணிக்குதிச்சான் ஊராட்சியில், PMAGY. 2023 – 2024 திட்டத்தின் கீழ், ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்து அணிக்குதிச்சான் ஊராட்சியில், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ் ரூபாய் 15.20 இலட்சம் மதிப்பீட்டில் பணி, கொடுக்கூர் ஊராட்சியில், NABARD RIDF XXIX 2023 -2024 திட்டத்தின் கீழ் ரூபாய் 45.63 இலட்சம் மதிப்பீட்டில் கொடுக்கூர் குடிகாடு மேலத்தெரு முதல் தொளார் எல்லை சாலை வரை (0/0 – 1/00) சாலையின் தரத்தினை மேம்பாடு செய்தல், மருதூர் ஊராட்சியில் NABARD RIDF XXIX 2023 -2024 திட்டத்தின் கீழ் ரூபாய் 42.16 இலட்சம் மதிப்பீட்டில், மருதூர் முதல் கீழப்பட்டி சாலை வரை (0/0 – 1/050) மேம்பாடு செய்தல், வாரியங்காவல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், ரூபாய் 7.00 இலட்சம் மதிப்பீட்டில் வாரியங்காவல் அம்மன் கோவில் அருகில் சிறுபாலம் அமைத்தல் போன்ற பணியினைசட்டமன்றஉறுப்பினர் துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் (கிராம ஊராட்சி), ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கலியபெருமாள், கூவத்தூர் பால் கூட்டுறவு சங்க செயலாட்சியர் ஆனந்தி, செயலாளர் லாரன்ஸ், ஒன்றிய குழு உறுப்பினர் தனசேகரன், கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட், துணைத் தலைவர் ஜாக்குலின் ஜேம்ஸ், பொறியாளர்கள் ராஜாசிதம்பரம், சித்ரா, ஒன்றிய துணை செயலாளர்கள் கென்னடி, செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் மேகலாசக்திவேல்(கொடுக்கூர்), பன்னீர்செல்வம் (மருதூர்), ராஜாசிதம்பரம், சித்ரா, ஒன்றிய பொருளாளர் கிரேஷ் சுப்ரமணியன், ஒன்றிய துணை செயலாளர்கள் கென்னடி, செந்தில்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அறிவழகன்,பாலமுருகன், தங்கராசு கருணாநிதி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜசேகர், செல்வக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஜய் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் வேல்முருகன்.