மின்சார ரெயில்கள் ரத்து!
சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு ஜன.27 இரவு 7, 8:20 மணி ரெயில்கள் அரக்கோணம் வரை இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மாலை 6:30 மணி ரெயில் அரக்கோணம் வரை இயக்கப்படும். திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு இரவு 9:45 மணி ரெயில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும். அரக்கோணத்தி திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு 28-ம் தேதி அதிகாலை 4:30 மணி ரெயில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும். திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு நாளை ஜன.27) இரவு 9:15, 11:15மணி ரெயில்கள், அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு 28-ம் தேதி அதிகாலை 4 மணி ரெயில் ரத்து செய்யப்படுகிறது என சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.