உணர்வுபூர்வமான விஷயங்கள் அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன-ராகுல் காந்தி!
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12, ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாம் கனவு காணும் இந்தியாவின் அடையாளம் என்னவாக இருக்கும் என்று இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்? வாழ்க்கையின் தரமா அல்லது உணர்ச்சிகள் மட்டும்தானா? ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பும் இளைஞர்களா அல்லது வேலை செய்யும் இளைஞர்களா? அன்பா அல்லது வெறுப்பா?இன்று, உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப உணர்வுபூர்வமான விஷயங்கள் அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என தெரிவித்துள்ளார்.