தேர்தல் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி..!



2024 – நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நடைபெற்றது. தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தஞ்சை மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு முதல்கட்ட நிதியினை வழங்கினர். கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆடுதுறை இரா. முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொருளாளர் மு. செந்திலதிபன் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சிப் பணிகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
அரசியலில் நேர்மை..!
பொதுவாழ்வில் தூய்மை..!
லட்சியத்தில் உறுதி..!
என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசியல் பொதுவாழ்வில் 60 ஆண்டுகாலமாக ஓய்வின்றி செயல்பட்டு வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் தன்னலமற்ற உழைப்பு, தமிழ்நாட்டின் நலனுக்காக மேற்கொண்ட வாழ்வாதார போராட்டங்கள் என மக்களுக்கான இயக்கமாக இருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியும், தேர்தல் அரசியலில் வெற்றி மட்டுமே நமது இலக்கு… அதற்காகன முன்னெடுப்புகள் குறித்தும் துரை வைகோ கருத்துரை வழங்கினார்.