தேசிய அளவிலான குறும்பட போட்டியில் தத்தனூர் M.R.கல்லூரி மாணவருக்கு சிறந்த இயக்குனர் விருது!
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான குறும்படப் போட்டியில் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் அகத்தியன் (கயமை கற்க) குறும்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருதினை பெற்றுள்ளார். மேலும் குறும்படத்தில் பணியாற்றிய மாணவர்களும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம். ஆர் கல்லூரியின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன், இயக்குனர் ஆர்.இராசமாணிக்கம், வை.தியாகராசன், முதல்வர் பி.சங்கீதா,துறைத்தலைவர் சி.சிலம்பரசன் மற்றும் இருபால் பேராசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.