“ரூ.1.26 கோடியில் வளர்ச்சி பணிகள்” ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்…!
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதி, கெலமங்கலம் ஒன்றியத்தில் போடிச்சிப்பள்ளி ஊராட்சி நெருப்புகுட்டை கிராமத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டிடம் கட்டும் பணி, ஜெக்கேரி ஊராட்சி ஜெக்கேரி கிராமத்தில் ரூ. 4.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, ரூ.3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, தாவரக்கரை கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, சின்னட்டி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணி, ஒண்ணுகுறிக்கி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டிடம் கட்டும் பணி, வடப்பன்குட்டை கிராமத்தில் சனத்குமார் நதிக்கு இடையில் ரூ.45 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணி, ஆனெகொள்ளு ஊராட்சியில் குட்டூர் கிராமத்தில் ரூ.4.20 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, ஏ.புதூர் கிராமத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, பொம்மதாத்தனூர் ஊராட்சி பச்சப்பனட்டி எஸ்.சி. காலனியில் ரூ.11.50 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், ரூ.18 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக், ரூ.16 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ரூ.4 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி என மொத்தம் ரூ 1. கோடியே 26 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிக்களுக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக்கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, சாந்தலட்சுமி , உதவி பொறியாளர் முருகேசன், குமார், ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தமிழ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெங்கடராமன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.