கோடை விடுமுறையை குறிவைத்து களமிறங்கும் “இந்தியன்-2”
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்,கமலுடன் காஜல் அகர்வால். ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ். ஜே. சூர்யா, சித்தார்த். பாபி சிம்ஹா ஆகியோர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றனர். மேலும், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கி வரும் இப்படம் இந்தியன் 2. இந்தியன் 3 எனஇரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இந்நிலையில், இந்தியன் 2 படக்குழுவினருடன் கமல் வைப் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. இந்தியன் 2-ம் பாகம் வரும் 2024 கோடைவிடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்கிறார்கள். இதையடுத்து இந்தியன் 3ம் பாகம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது என்கிறார்கள்.