இடிக்கப்பட்ட அரசு கட்டிடத்தில் உள்ள பழமையான விலை உயர்ந்த தேக்கு மர ரீப்பர் ,பலகை மற்றும் ஜன்னல்களை தன்னிச்சையாக குறிஞ்சிப்பாடி பகுதியில் தனிநபருக்கு விற்பனை செய்து வரும் ஊராட்சி நிர்வாகம்
பட்டப் பகலிலேயே நம்பர் பிளேட் இல்லாத
டிராக்டர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி ,,
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியதிற்குட்பட்ட மருதூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது
இந்த அலுவலகத்திற்கு அருகே கால்நடை மருத்துவமனை அரசு நூலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது
இங்கு தற்காலிகமாக அரசு நூலகம் பழைய ஊராட்சி மன்ற அலுவலகமாக செயல்படுத்தப்பட்டு வந்தது பின்னர் கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் அவர்களின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகின்றது
இந்நிலையில் திடீரென ஊராட்சி நிர்வாகத்தால் அங்கு உள்ள பழமையான கால்நடை மருத்துவமனை மற்றும் பழைய ஊராட்சி கட்டிடத்தில் உள்ள மேற்கூரைகள் அகற்றப்பட்டு பல லட்சம் மதிப்பில் அங்கு நிறுவப்பட்டிருந்த தேக்கு அருவகால்கள், ஜன்னல்கள் மற்றும் ஓடு போட்ட மேற்கூரில் உள்ள ரிப்பர்கள் ஆகியவை அகற்றப்பட்டு பதிவு எண் இல்லாத டிராக்டர் மூலம் பட்டப் பகலில் குறிஞ்சிப்பாடி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையால் தானே வீடு திட்டத்திற்கு வழங்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவம் பதித்த டைல்ஸ்கள் அதிக அளவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது
தமிழக அரசு அண்மையில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் முன்அனுமதி பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டு அரசு கட்டிடத்தை இடித்து அதில் உள்ள விலை உயர்ந்த மர ஜன்னல்கள். பலகைகள் மற்றும் ரீப்பர்களை தனிநபருக்கு விற்பனை செய்வது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு தற்பொழுது நடந்து வரும் ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது
மேலும் அதே பகுதியில் ஊராட்சி மன்ற துணை தலைவராக அன்னக்கிளி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் அதன் மூழு அதிகாரத்தை முழுமையாக அவரது கணவராகிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் இளந்தரையன் என்கிற பிரகாஷ் அவர்கள் கைப்பற்றி நடைமுறைப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது
மேலும் அரசு விதிகளுக்கு மாறாக ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 25 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலர் பழனி இளங்கோவன் ஆகிய மூவரும் சேர்ந்து அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு இச்செயலை துணிச்சலாக செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இது போன்ற தமிழக அரசின் உத்தரவின்றி வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி துணை தலைவர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.