“கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை”
“கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம்
கார்த்திகை தீபம் ஏற்றும் முறை”
கார்த்திகை மாதம் என்றாலே தீபம் ஏற்றுவது தான் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. மேலும் அன்றைய தினம் பொறி செய்து சாப்பிடுவோம். கோவில்களில் அன்றையநாள் சொக்க பானை ஏற்றுவார்கள். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை வருகின்றது. அன்றைய நாள் வீடு முழுவதும் அகல் விளக்கு மற்றும் குத்து விளக்கு போன்றவை வைத்து விளக்கு ஏற்றுவோம். இந்த விளக்கு ஏற்றுவதற்கான முறைகள் இருக்கிறது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் எப்போது:
26 நவம்பர் 2023 – இந்நாளில், காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் இருக்கும்.
வீட்டில் தீபம் ஏற்றுவதற்கான சரியான நேரம்:
வீட்டில் தினமும் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் விளக்கேற்றி பூஜை வழிபட வேண்டும். அது போல திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றப்படும். அப்போதும் நாமும் மாலை 6 மணிக்கு நம் வீட்டு வாசலில் விளக்கேற்ற வேண்டும்.
பழைய விளக்குகள்:
பெரும்பாலானவர்களுக்கு பழைய அகல் விளக்குகளை பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் இருக்கும். அதற்கான பதிலை சொல்கிறேன் அறிந்து கொள்ளுங்கள். பழைய அகல் விளக்குகளை தாரளமாக பயன்படுத்தலாம். ஆனால் அதோடு புது 5 அல்லது 10 விளக்குகள் வாங்கி வைத்து ஏற்றுங்கள்.
எத்தனை விளக்குகள் எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும்:
கார்த்திகை தீபம் ஏற்றும் முறை
பெரிய கார்த்திகை அன்று 27 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் ஏற்ற வேண்டும். மூன்று நாட்களும் 27 விளக்குகள் ஏற்ற முடியாவிட்டால் அடுத்தடுத்த நாட்கள் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும்.
எவ்வளவு நேரம் விளக்கு எரிய வேண்டும்:
வாசலில் வைத்துள்ள குத்து விளக்கு மட்டும் 30 நிமிடம் எரிய வேண்டும். மற்ற விளக்குகள் எண்ணை தீர்கின்ற அளவிற்கு எரிந்தாலே போதுமானது.
கார்த்திகை விரதம்:
கார்த்திகை அன்று சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் பாலும், பழமும் எடுத்து கொள்ளலாம். இதோடு மௌன விரதமும் இருப்பது சிறந்தது.
விரதம் நன்மைகள்:
கார்த்திகை அன்று விரதம் இருப்பதால் நம் வாழ்க்கையில் இருக்க கூடிய பிரச்சனைகள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நம்முடைய பாவங்கள் நீங்கும்.