“வளர்ச்சி” என்ற பெயரில் வட தமிழ் நாட்டில்” இன அழிப்பு” செய்கிறது அரசு .எழுத்தாளர் பவா சமத்துவன் பரபரப்பு பேச்சு .

“வளர்ச்சி” என்ற பெயரில் வட தமிழ் நாட்டில்” இன அழிப்பு” செய்கிறது அரசு .எழுத்தாளர் பவா சமத்துவன் பரபரப்பு பேச்சு .

“ஊடகச் செம்மல்” பவா சமத்துவன் எழுதிய ,பிரபாகரன் -வாழ்வும் இயக்கமும்..! என்ற நூல் வெளியீட்டு விழா 25-11-2023 அன்று சென்னையில் நடந்தது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திரு.தி வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தி.க , மதிமுக ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் பலவும் கலந்து கொண்டனர்.

விழாவில் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் “ஊடகச் செம்மல்” பவா சமத்துவன் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வீசியும் ,ஏவுகணை வீசி வீடுகளை தரைமட்டமாக்கியும் தான் ஒரு மக்கள் கூட்டத்தை “இனப்படுகொலை” செய்ய முடியும் என்றில்லை .

நேற்று ஈழத்தின் முள்ளிவாய்க்காலிலும் இன்று பாலஸ்தீனத்தின் காசாவிலும் நடைபெறுகிற இனப்படுகொலையை போலவே,

இவ்வகையான ஆயுதங்கள் ஏதுமில்லாமல் “வளர்ச்சி” என்ற பெயரிலும் “அபிவிருத்தி” என்ற பெயரிலும் அரசாங்கங்கள் “இன அழிப்பு” செய்ய முடியும் என்பதை இப்போது நாம் பார்த்து வருகிறோம்.

வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் பூர்வீக தொல்குடிகளான பள்ளி ( வன்னியர்) பறையர் (ஆதிதிராவிடர்கள்)

இவர்களது நிலத்தையும் வாழ்வையும் பறித்து அழித்தொழிக்கிற முயற்சி பல்லாண்டுகளாகவே நடந்து வருகிறது.

நெய்வேலி நிலக்கரி நிறுவன திட்டம் என்ற பெயரிலும் அதன் விரிவாக்கம் என்ற வகையிலும் தமிழகத்தின் பூர்வீக குடிகள் அதிகம் வாழ்கிற கடலூர் மாவட்டமே சூறையாடப்பட்டு விட்டது.

இன்று அதே பூர்வீக குடிகள் பெரும்பான்மையாக வாழ்கிற காஞ்சிபுரம் -திருவள்ளூர் மாவட்டங்களை குறிவைத்து, புதிய பசுமை விமான நிலைய திட்டம் என்கிற பெயரால் நிலங்கள் சூறையாடப்படுகிறது.

ஒரு விமான நிலையத்திற்கு, அதற்கான நில இடுப்பிற்கு ஒன்றிரண்டு கிராமங்கள் தேவைப்படலாம். ஏன் அதிகபட்சமாக அது நாலைந்தாகக் கூட இருக்கலாம்.

ஒரு மாவட்டத்தின் பெரும் பகுதியாக இருக்கிற இருபது கிராமங்களையே ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து , நிலமும் வாழ்வும் இல்லாமல் அவர்களை அகதிகள் ஆக்குவதை ‘இன அழிப்பு “என்று சொல்லாமல் வேறு எப்படி கூறுவது..?

இதற்குள்ளே இருக்கும் நில அரசியலையும், இந்த நில அரசியலை நடத்துகிற ,கட்சி தலைமைகளையும் .ஆட்சி தலைவர்களையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் ,

தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற சாதி அரசியலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை இனங்களுக்கு கல்வி- வேலை வாய்ப்பு- ஆட்சி அதிகாரத்தில் அவர்களுக்கான பங்கை அளிக்காமல், அவர்களை மறைமுகமாக அழித்தொழிக்கும் வேலையை, கட்சி அரசியலை – ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சில சாதிகள் நடத்தி வருகிறன.

இதற்கு அவர்கள் திராவிடம் – தேசியம்- பொதுவுடைமைத் தத்துவம் என்று பலவண்ண முகமூடிகளை அணிந்து கொள்கின்றனர்.

இதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்கிற பொழுதுதான் தமிழகத்திற்கு உண்மையான “விடியல்” பிறக்கும்

இனப்படுகொலையும் -இன அழிப்பும் முள்ளிவாய்க்காலில் நடந்தாலும் காசாவில் நிகழ்ந்தாலும் இன்று ஏகனாபுரத்தில் நடத்தப்பட்டாலும் அதை எதிர்க்கிற எனது பணி என்றென்றும் தொடரும்..!”

“ஊடகச் செம்மல் பவா சமத்துவனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

திரு ‌பவா சமத்துவன் பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தயாரிப்பு இயக்குனராகவும், செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியவர் மேலும், நிறைய நூல்களை எழுதி பல விருதுகளையும் பெற்றவர் ‌.

புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து கடந்த 500 நாட்களாக போராடிவரும் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு. ‌பவா சமத்துவன் என்பது குறிப்பிடத்தக்கது .

தகவல் உதவி

வாசன் . வி.

ஒருங்கிணைப்பாளர் ,

வட தமிழ்நாடு மக்கள் முன்னணி சென்னை.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *